நிர்க்கதியான மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
 

கடற்பரப்பில் நிர்க்கதியான நிலைக்குள்ளாகியிருந்த மீனவர்கள் அவர்களின் படகு என்பன இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடல் பணிமூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.ஜூன் மாதம் 20ஆம் திகதி மீன்பிடிக்காக புறப்பட்டுச் சென்ற 'எஸ்எல்எப்வீ ஏகா திஸ்ஸ' என்ற மீனவப்படகு இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் நிர்கதிக்குள்ளானது.

காணாமல் போன குறித்த மீனவப்படகு தொடர்பாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இலங்கை கடற்படையினரின் சிந்துரால கடற்படைக்கப்பல் தேடல் பணிகளில் ஈடுபட்டது. இத்தேடல் நடவடிக்கை காரணமாக தென் தேவேந்திர முனை கலங்கரை விளக்கிலிருந்து சுமார் 640 கடல் மைல் தொலைவில் நிர்கதிக்குள்ளான மீனவர்களும் அவர்களின் படகும் சிந்துரால கடற்படைக்கப்பலினால் கண்டுபிடிக்கப்பட்டன.

இத்தேடல் பணிகளில் அமெரிக்க கடற்படையின் 7வது பிராந்தியத்தின் ரோந்துப்பணிகளில் ஈடுபடும் விமானங்களின் உதவியுடன் நிர்கதிக்குள்ளான மீனவர்கள் இருந்த இடம் கண்டறியப்பட்டது. இம்மீனவர்கள் தேடல் தொடர்பாக அமெரிக்க தூதரகத்தின் அனுசரணையும் பெற்றுக்கொள்ளப்பட்டது.காணாமல் போன மீனவர்கள் கடந்த புதன்கிழமையன்று (ஜுலை, 11) சிந்துரால கடற்படைக்கப்பல் மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டனர்.