கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி (JCET) திருகோணமலையில் தொடங்கியது
 

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி  (Joint Combined Exchange Training) நேற்று (ஜூலை 17) திருகோணமலை கடற்படை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் தொடங்கியது. இப் பயிற்சியின் தொடக்க விழாவிற்கு 4 வது விரைவு தாக்குதல் படகுகள் குழுவின் கட்டளை அதிகாரி கேப்டன் டேமியன் பிரனாந்து, சிறப்பு படகு படை தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் அருன வீரசிங்க மற்றும் அமெரிக்க கடற்படை சிறப்பு படைத் பிரிவின் வீரர்கள் கழந்துகொன்டனர்.

இந்த பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றதுடன் இப் பயிற்சி மூலம் கடற்படையினர்களுக்கு பயிற்சி மற்றும் ஆதரவு தேவைகள் பற்றி நல்லிணக்கம், புரிதல் மற்றும் ஒப்பந்தம் பெற முடிகின்றது. கடற்படை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் 04 வார காலப்பகுதி நடைபெறுகின்ற இப் பயிற்சிக்காக கடற்படை சிறப்பு படகு படை, 4 வது விரைவு தாக்குதல் படகுகள் குழு மற்றும் அமெரிக்க கடற்படை சிறப்பு படைத் பிரிவின் வீர்ர்கள் பங்கேற்க உள்ளனர். இப் பயிற்சி மூலம் தொழில் திறன் மேம்பாடு இலங்கை கடற்படையினர் மற்றும் அமெரிக்க கடற்படையினர் இடையில் அறிவு பகிர்வு முக்கிய குறிக்கோளாக அடையாளம் காணலாம்.