கடற்படை நீரியல் அளவைப் பிரிவின் பிரதானி பாதுகாப்பு படைகளின் பிரதானியுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படை நீரியல் அளவைப் பிரிவின் பிரதானி ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி அவர்கள் கடந்த 11 ஆம் திகதி பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களை பாதுகாப்பு படைகளின் பிரதானி அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.

இலங்கை கடற்படை நீரியல் அளவைப் பிரிவினால் இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளில் தற்போதைய முன்னேற்றம் பற்றி பாதுகாப்பு படைகளின் பிரதானியை அறிவூட்டல் செய்யும் நோக்கத்துடன் ஏற்பாடுசெய்யப்பட்ட இப் சந்திப்பின் போது இலங்கையில் நீரியல் அளவை நடவடிக்கைகளுக்காக கடற்படை பங்களிப்பைக் குறிக்கும்  ஒரு சிறிய ஆவணப்படமொன்றும் சமர்ப்பிக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக பாதுகாப்பு படைகளின் பிரதானி உட்பட பாதுகாப்பு படைகளின் பிரதானி அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள் கழந்துக்கொன்டனர்.

அங்கு நீரியல் அளவைப் பிரிவு பெற்ற வெற்றிகளுக்கு கடற்படை நீரியல் அளவைப் பிரிவின் பிரதானி உட்பட அனைத்து ஊழியர்களயும் பாதுகாப்பு படைகளின் பிரதானி பாராட்டினார். இப் பிரிவின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக தொடர்ந்து உதவி வழங்குவதாகவும் அவர் மேலும் கூறினார்.

நீரியல் அளவைப் பிரிவின் பிரதானி அவர்களால் நீரியல் அளவைப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட இரண்டு வரைபடங்கள் பாதுகாப்பு படைகளின் பிரதானியவர்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக கடற்படை நீரியல் அளவைப் பிரிவின் செயல்பாடுகளுக்கான இயக்குனர், இயக்குனர் தரவு மேலாண்மை உட்பட பல அதிகாரிகள் கழந்துகொன்டனர்.