சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 76 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு
 

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 76 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமான மீன்பிடி, அனுமதி இல்லாமல் மீன்பிடி மற்றும் வெடி பொருற்கள் பயன்படுத்தி மீன்பிடி ஆகிய காரனங்களினால் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரமாக வடக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த ஜுலை 16 ஆம் திகதி பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து 02 டிங்கி படகுகள், சட்டவிரோதமான ஒரு வலை மற்றும் மீன்பிடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மற்றும் டிங்கி படகுகள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் படி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த ஜுலை 16 ஆம் திகதி புதுமாதலன் கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான வெடி பொருற்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்மிடம்ருந்து பிடிக்கப்பட்ட 1350 மீன் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் மற்றும் மின் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லத்தீவு துனை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் படி கடந்த ஜுலை 16 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள், முல்லைத்தீவு, மீன்வள ஆய்வாளர் மற்றும் கோகிலாய் பொலிஸார் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 06 டிங்கி படகுகள் மற்றும் 04 சட்டவிரோதமான வலைகள் முல்லைத்தீவு மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த ஜுலை 17 ஆம் திகதி புல்மோட்டை கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து பிடிக்கப்பட்ட 64 கிலோகிராம் மீன்கள், ஒரு டிங்கி படகு, சட்டவிரோதமான ஒரு வலை கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், வலைகள் மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவேலி(தென்) மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை 17 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிருவனம் பகுதியில் அனுமதி பத்திரிக்கை இல்லாமல் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டது. அங்கு அவர்களிடமிருந்து 210 கடல் அட்டைகள், ஒரு டிங்கி படகு மற்றம் சிறிய வல்லமொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபர்கள், கடலட்டைகள், டிங்கி படகு மற்றும் வல்லம் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்பானம் துனை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த ஜுலை 18 ஆம் திகதி எலஸ்வத்த கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக பிடித்த 25 கிலோ கிராம் மீனகள், 03 டிங்கி படகுகள் மற்றும் 04 சட்டவிரோதமான வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொருற்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த ஜூலை 18 ஆம் திகதி மட்டக்களப்பு குளம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது கட்டவிரோதமான வலைகள் 50 கன்டுபிடிக்கப்பட்டது. குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு துனை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த ஜுலை 19 ஆம் திகதி குருனகர் இரங்கு துரையில் வைத்து சட்டவிரோதமான வெடி பொருற்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர்(02) கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக பிடித்த 22 கிலோ கிராம் மீன்கள், டிங்கி படகு மற்றும் சட்டவிரோதமான 02 வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொருற்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்பானம் துனை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளத்து.