யாழ்ப்பாணம், புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தின் கணினி ஆய்வகம் கடற்படையினரினால் புதுப்பிக்கப்பட்டது
 

கடற்படை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பல சமூக சேவைகளில் மற்றொரு படியாக வடக்கு கடற்படை கட்டளை தளபதியுடய வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணம், புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில் கடற்படையினரினால் புதுப்பிக்கப்பட்ட கணினி ஆய்வகம் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.  இன் நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 01) வடக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் செனரத் விஜேசுரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக இலங்கை கடற்படை கப்பல் கோடய்ம்பர நிருவனத்தின் கட்டளை அதிகாரி கொமான்டர்(ஆயுதங்கள்) பிரசாத் விதானகெ பணியாளர்கள் அதிகாரி தரை செயல்பாடுகள் (வடக்கு) கொமான்டர் புத்திக சந்திரசிரி, பாடசாலையின் அதிபர் எஸ் கமலேந்திரன் ஆகியோர் உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள், மானவர்கள் மற்றும் பெற்றோர் கழந்துகொன்டனர்.

இந்த கட்டிடத்தின் கட்டுமானம் பணிகள் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கை கடற்படை கப்பல் கோடய்ம்பர நிருவனத்தின் கட்டளை அதிகாரிகளுடைய மேற்பார்வையின் கீழ் வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களினால் மிக குறுகிய காலத்தில் முடிவுசெய்துள்ளனர். குறித்த கட்டிடத்தின் நிர்மானப் பணிகளுக்காக கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மானவர் சங்கம் மூலம் நிதியளிக்கப்பட்டது. மேலும், இது விரைவாக புதுப்பிக்கப்பட்ட காரனத்துக்காக பாடசாலையின் முதல்வர் மற்றும் பெற்றோர்கள் கடற்படைக்கு நன்றி தெரிவித்தனர்.