சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமான மீன்பிடி காரனங்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த ஆகஸ்ட் 06 ஆம் திகதி பவுல்துடுவ கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து ஒரு சட்டவிரொதமான வலை மற்றும் ஒரு டிங்கி படகு கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடலோர பாதுகாப்பு திணைக்களம் மூலம் திருகோணமலை துனை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0
கடந்த ஆகஸ்ட்  07 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களினால் பல்லியவாசல்குடா கடல் பகுதியில் சந்தேகமான படகொன்று சோதிக்கும் போது அங்கு இருந்த 04  பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து 417 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது. குறித்த சந்தேக நபர்கள், பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு, சுங்க திணைக்களமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் திகதி எலிசபத் தீவு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து பிடிக்கப்பட்ட 04 கிலோகிராம் மீன்கள், 02 சட்டவிரொதமான வலை மற்றும் ஒரு டிங்கி படகு கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துனை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 11 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களினால் உலிச்சான்குழம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக சங்கு சிப்பிகள் சேகரித்துக்கொன்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் மற்றும் 1960 சங்கு சிப்பிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம், மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.