ஜப்பானிய கடல்சார் தற்பாதுகாப்பு படைக்கு சொந்தமான “இகாசுச்சி” எனும் கப்பல் இலங்கை வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு ஜப்பானிய கடல்சார் தற்பாதுகாப்பு படையின் “இகாசுச்சி” கப்பல் இன்று (ஆகஸ்ட், 20) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர். இன் நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் நன்தன ஜயரத்ன அவர்களும் கழந்துகொன்டார்.

இகாசுச்சி கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த பின் கப்பலின் செயல்பாடுகள் அதிகாரியான கேப்டன் ரொயொகொ இசுமா அவர்கள் மற்றும் கட்டளை அதிகாரி உட்பட அதிகாரிகள் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களை சந்தித்தார்கள்.

மேலும் கப்பலின் செயல்பாடுகள் அதிகாரி உட்பட குழுவினர் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் தளபதி அரங்கத்தில் பயிற்சி கேப்டன் கோசல விஜேசூரிய அவர்கள் சந்தித்தார். அங்கு இரு நாடு கடற்படை பயிற்சிகள் தொடர்பாக சில முக்கிய விஷயங்கள் பற்றி உரையாடினார்.மேலும் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.அதன் பின் அவர்கள் கடற்படை அருங்காட்சியகமும் பார்வையிட்டனர்.

இக்கப்பலில் வருகைதந்த சிப்பந்திகள் இலங்கையில் தரித்திருக்கும் வேளையில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.