தெக்கு கடற்பரப்பில் தத்தளித்திகொண்டிருந்த 11 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
 

தெக்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகு மூலம் இன்று (ஆகஸ்ட் 20) திகதி காலி கடற்பரப்பில் தத்தளித்திகொண்டிருந்த இருந்த 11 பேர் காப்பாற்றியுள்ளனர்.

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து “தேஜான் புதா” எனும் படகின் மூலம் சென்றிருந்த மீனவர்களின் உயிர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது. மீன்பிடி தமது பயணத்தை மேற்கொண்டிருந்த போது காலி கடற்பரப்பிற்கு அப்பால் படகு கவிழ்ந்து நிர்கதியாகியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் கிடைதத்த பின்னர் கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகு மற்றும் கரையோர ரோந்துப் படகு ஆகியன விரைந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மற்றுமொரு மீனவப்படகின் மூலம் மீட்கப்பட்ட மீனவர்கள் அதிவிரைவு தாக்குதல் படகின் மூலம் காலி கலங்கரை விளக்கிலிருந்து 3.6 கடல் மைல்களுக்கு அப்பாலிருந்த மீனவர்களை காலி துறைமுகத்திற்கு பாதுகாப்பாக கொண்டுவந்துள்ளனர்.