அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் “2018 காகாடு” நிகழ்வில் பங்கேற்க "சிந்துறால" பயணம்
 

இலங்கை கடற்படையின் அதி நவீன ஆழ்கடல் ரோந்துக் கப்பலான "சிந்துறால" “2018 காகாடு” கூட்டு கடற்படை பயிற்சி நிகழ்வில் பங்கேற்க நேற்று (ஆகஸ்ட், 20) நாட்டைவிட்டு அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது. இன் நிகழ்வுக்கு கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களும் கழந்துகொன்டார். அங்கு தளபதியவர்களினால் கப்பலின் கட்டளை அதிகாரி உட்பட அனைத்து வீர்ர்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

26 கடற்படை அதிகாரிகள் மற்றும் 124 கடற்படை சிப்பந்திகள் உட்பட 150 பேர் பயணிக்கும் குறித்த கப்பல் இம்மாதம் (ஆகஸ்ட்) 29ஆம் திகதி அவுஸ்திரேலியாவை சென்றடைய உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் “2018 காகாடு” கூட்டு கடற்படை பயிற்சியினை ரோயல் அவுஸ்திரேலிய கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இப்பயிற்சியானது இம்மாதம் (ஆகஸ்ட்) 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. அவுஸ்திரேலியாவின் டார்வின் துறைமுக கடற்பகுதியில் இடம்பெற உள்ள இக்கூட்டு கடற்படை பயிற்சியில் மனிதாபிமான உதவி, அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தல், கடல்சார் தேடல்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உட்பட பரந்தளவிலான வான் மற்றும் கடல்சார் கடற்படை நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.

இவ்வருடம் நடைபெற உள்ள இப்பயிற்சியில், கனடா, பிஜி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, சீனா, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பாக்கிஸ்தான், பிலிப்பைன்ஸ், கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உட்பட 26 நாடுகளை சேர்ந்த கடற்படை பிரதிநிதித்துவங்கள் பங்கேற்கவுள்ளதுடன், 24 கடற்படை கப்பல்கள் மற்றும் 21 விமானங்கள் ஆகியன கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.