கடலில் தத்தளித்திகொண்டிருந்த 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
 

இலங்கைக்கு சொந்தமான வடக்கு கடலில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த வடக்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகொன்று மூலம் நேற்று (ஆகஸ்ட் 22) திகதி கடலில் தத்தளித்திகொண்டிருந்த 06 இந்திய  மீனவர்கள் காப்பாற்றப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான வடக்கு கடலில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த வடக்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகில் உள்ள கடற்படையினர் கோவிலன் கலங்கரை விளக்கத்துக்கு சுமார் 15 கடல் மைல்கள் தூரத்தில் குறித்த மீனவர்கள் தத்தளித்திகொண்டிருந்த கண்கானித்தனர். பின்னர் கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகில் உள்ள கடற்படையினர் விரைந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

மீனவர்களை மீட்ட பின் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த துரித தாக்குதல் படகொன்று மூலம் பாதுகாப்பாக காங்கேசன்துறையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்துக்கு கொன்டுவந்து முதல் உதவி வசதிகளை வழங்கிய பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.