வடமேல் மாகாணத்தில் மேலும் 13 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

வடமேல் மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் நிறுவப்பட்ட 13 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் திறந்து வைத்துள்ளார். பொல்பிதிகம பகுதியில் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட், 24) இடம்பெற்ற நிகழ்வின்போது ரிமோட் சென்சிங் தொழில்நுட்பம் மூலம் இந்நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

பொல்பிதிகம பிரதேச செயலகப்பிரிவில் உள்ள பூகொள்ள, ஹங்கமுவ, தும்புக்குளாவ, தளதாபிடிய, மக்குள்பொத, தொரவேருவ, வெள்ளங்கொள்ள, அஹெடுவெவ பிரதேச செயலகப்பிரிவில் மஹா அம்பகமுவ, நிதாலவ, கந்துருவெவ, வெஹரகோடயாய, இஹல திகன மற்றும் இப்பாகமுவ பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கிரிபமுன ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் பெருந்தொகையான மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வகையில் இக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

டிசம்பர் மாதம் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை கடற்படையினரின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவும் திட்டத்தின் மூலம் சிறுநீரக நோய் அதிகம் பதிவாகியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் 432  குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.