ருவாண்டா பாதுகாப்பு அமைச்சர் தென் கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துக் கொள்ளவதுக்காக இலங்கைக்கு வந்தடைந்த ருவாண்டா பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஜேம்ஸ் கபாரேபே (James Kabarebe) அவர்கள் இன்று (ஆகஸ்ட் 31) தென் கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். அங்கு அவருக்கு கடற்படை மரபுகளுக்கு அமைவாக விசேட கடற்படை அணிவகுப்பு மரியாதையளித்த பின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்களினால் கட்டளை தலைமையகத்தில் வரவேற்கப்பட்து.

அதன் பின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஜேம்ஸ் அவர்கள் தளபதிவுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். அங்கு தென் கடற்படை கட்டளையின் அமைப்பு மற்றும் கடற்படையின் பணி தொடர்பாக கலந்துரையாடபட்டது. இன் நிகழ்வுக்காக தென் கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் ஷாந்த கலுபோவில அவர்கள் உட்பட தென் கடற்படை கட்டளையின் முத்த அதிகாரிகள் கழந்துகொன்டனர்.