சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 24 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு
 


அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 24 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடித்தல், வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடித்தல், புதையல் தோண்டல் மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனை ஆகிய காரனங்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் திகதி பவுல்துடுவ இருந்து 11 கடல்மைல்கள் வடக்கு திசையில் உள்ள கடல் பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 02 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து 12 வண்ண மீன்கள்(Colour Fish), ஒரு டிங்கி படகு மற்றும் 03 சட்டவிரொதமான வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துனை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி கல்முனைய் கடல் பகுதியில் மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து 02 டிங்கி படகுகள், 02 சட்டவிரொதமான வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒலுவில் துனை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி லங்காபட்டுன கடல் பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து ஒரு டிங்கி படகு, ஒரு சட்டவிரொதமான வலை, வோட்டர் ஜெல் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முத்தூர் மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி சின்னவேலி பகுதியில் புதையலைத் தோண்டிய 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து ஒரு முச்சக்கர வண்டி, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் புதையலைத் தோண்டுவதுக்காக பயண்படுத்தப்படுகின்ற பொறுட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சேருனுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் கம்பஹா, உணவு மற்றும் மருந்துகள் ஆய்வு பிரிவின் அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி வத்தலை எலகந்த பகுதியில் வைத்து காலாவதியான மருந்துகள் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டது. அவரிடம் இருந்து 1290 காலாவதியான மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மற்றும் காலாவதியான மருந்துகள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கம்பஹா, உணவு மற்றும் மருந்துகள் ஆய்வு பிரிவின் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் கடந்த செப்டம்பர் 01 ஆம் திகதி ரோந்து பணிகளில் ஈடுபடும் போது மட்டக்களப்பு குளம் பகுதியில் 26 சட்டவிரோதமான 26 வலைகள் கன்டுபிடிக்கப்பட்டது. குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு துனை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.