பாதுகாப்பு சேவைகள் வுஷு சாம்பியன்ஷிப் கடற்படை வென்றது
 

பாதுகாப்பு சேவைகள் வுஷு போட்டித்தொடர் நேற்று (செப்டம்பர் 06) பனாகொட, இராணுவ முகாமில் இடம்பெற்றதுடன் இப் போட்டித்தொடருக்கு முப்படை பிரதிநிதித்துவப்படுத்தி பல வீர வீராங்கனிகள் கழந்துகொன்டனர். அங்கு 26 தங்க பதக்கங்கள், 12 வெள்ளி பதக்கங்கள், 19 வெண்கல பதக்கங்கள் பெற்ற கடற்படை அணி இப் போட்டித்தொடரில் சாம்பியன்ஷிப் பெற்றுள்ளது.

இலங்கை இராணுவத்தின் தலைமை பணியாளர் மேஜர் ஜனரல் தம்பத் பிரனாந்து அவர்கள் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கழந்துகொன்டார். இன் நிகழ்வுக்காக கடற்படை வுஷு பிரிவின் தளபதி லெப்டினென்ட் கமாண்டர் முகமது ஃபைசல் அவர்கள் மற்றும் முப்படையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகளும் கழந்துகொன்டனர்.