சமீபத்திய வரலாற்றில் கன்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய கேரள கஞ்சா பொதி கடற்படையினரினால் கன்டுபிடிக்கப்பட்டது.
 

வடமத்திய கடற்படை கட்டளையின் மூன்று கடலோர ரோந்து படகுகளுக்கு இனைக்கப்பட்ட கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது இரனைத்தீவுக்கு தென் கிழக்கு பகுதி கடலில் மிதந்த 284.05 கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சா பொதி 95 பொட்டலங்களாக உள்ளது. விற்பனைக்காக இவ்வாறு கடல் வழியாக தரைக்கு கொன்டுவர முயற்சித்ததாக சந்தேகப்படுகின்றது.மேலும் குறித்த கஞ்சா பொதி சமீபத்திய வரலாற்றில் கன்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய கேரள கஞ்சா பொதியாகும். அதன் மதிப்பு சுமார் 30 மில்லியன் ஆக கூறப்படுகினறன. குறித்த கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முலன்காவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.