எண்ணெய் கசிவினையாள் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதம் கட்டுப்படுத்த கடற்படையினர் விரைவு
 

கொழும்பு திகோவிட கடலோரப்பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணைக்கசிவினை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்படை, கடலோரகாவட்படை மற்றும் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். முத்துராஜவெல எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுசெல்லப்படும் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் கடலில் எண்ணெய் மிதப்பததுடன் கடலோரம் மாசடைந்தும் காணப்படுகின்றன.

எண்ணெய் கசிவினை பற்றிய தகவலை பெற்றதுடன் கடற்படைத் தலைமையகத்தின் ஆலோசனைப்படி  நூற்றுக்கணக்கான கடற்படை வீரர்களுடன் கடலோர காவற்படையினர் இணைந்து கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திணைக்கள நிபுணர்களுடன் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் ஆகியோர் எண்ணெய் கசிவை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதேவேளை கடந்த ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஜப்பான் நாட்டினால் அன்பளிப்பு செய்யப்பட “ சமரக்க்ஷா” மற்றும் “சமுத்திர ரக்க்ஷா” ஆகிய இலங்கை கடலோர பாதுகாப்பு கப்பல்கள் எண்ணெய் கசிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் கடலுக்கு வெனியேறிய எண்ணெய் சிறிய காலத்துக்குள் நீக்குவதுக்கான நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளதுடன் அதன் பிரகாரமாக இலங்கை கடலோரகாவட்படையுடன் இனைந்து இலங்கை கடற்படை எண்ணெய் பரவுவதை தடுக்கும் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது மூலம் எண்ணெய் கசிவில் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதத்தை குறைக்கப்படும்.