கடுமையாக சுகயீனமுற்றிருந்த வெளிநாட்டு மாலுமியை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் ஆதரவு
 

கடற்படைக்கு கிடத்த தகவலின் படி Bow Harmony என எரிபொருள் கப்பலில்லுள்ள கடுமையாக சுகயீனமுற்றிருந்த வெளிநாட்டு மாலுமி ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையினர் இன்று (செப்டம்பர் 10) ஆதரவு வழங்கியது.

நார்வே கொடியின் கீழ் பயணித்துக்கொண்டிருந்த குறித்த கப்பலில் காயமடைந்த ஒருவர் இருக்கிறார் என்று இலங்கை கடற்படைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் இலங்கை கடற்படை மேற்கு கடற்படை கட்டளையின் அதிவிரைவு தாக்குதல் படகின் மூலம் குறித்த நபரை தேடி விரைந்தனர்.

கொழும்பு கலங்கரை விளக்கிலிருந்து 28 கடல் மைல் தொலைவில் குறித்தவரை கண்டுபிடிக்கப்பட்டது. கப்பலில் இருந்து மாலுமியை மாற்றப்பட்டு அதிவிரைவு தாக்குதல்தாக்குதல் படகின் மூலம் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட மாலுமியை மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு நாவலோக தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.