வட கடலில் 118 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் (03) கைது
 

வட கடற்படை கட்டளையின் செட்ரிக் படகுக்கு இனைக்கப்பட்ட கடற்படையினரினால் கடந்த செப்டம்பர் 09 ஆம் திகதி பருத்தித்துறை கலங்கரை விளக்கத்துக்கு 10 கடல் மைல்கள் தூரம் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 118 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் (03) கைதுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த கேரளா கஞ்சா பொதி 48 பொட்டலங்களாக உள்ளதுடன் சிறிய படகொன்று மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மன்னார் பகுதியில் வசிக்கும் 32 மற்றும் 36 வயதானவர்களாக குறிப்பிடத்தக்கது. அதன் மதிப்பு சுமார் 12 மில்லியனாக கூறப்படுகின்றன. கைது செய்யப்பட்ட கேரளா கஞ்சா பொதி மற்றும் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.