வெற்றிகரமான விஜயத்தின் பின் பங்களாதேஷிய கடற்படை கப்பல் ‘சொமுத்ரா ஜோய்’ கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது
 

நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த 'சொமுத்ரா ஜோய்’ ' எனும் பங்களாதேஷிய கடற்படைக்கப்பல் இன்று (செப்டம்பர் 16) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது. நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டது.

இக் கப்பல் இலங்கையில் இருந்த காலத்தில்  மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களினால் கன்கானிப்பு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். மேலும் கப்பலின் குழுவினர் இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்த நட்பு கைப்பந்து போட்டிகளிளும் கழந்துகொன்டனர்.