வங்காளம் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் குழுவினர் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

இலங்கைக்கு வந்தடைந்த வங்காளம் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் குழுவினர் பிரதானி ரியர் அட்மிரல் முகம்மது அன்வருல் இஸ்லாம் அவர்கள் உட்பட 23பேர் நேற்று (செப்டம்பர் 19) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். அங்கு அவருக்கு கடற்படை மரபுகளுக்கு அமைவாக துனை கட்டளை அதிகாரி கொமடோர் நந்தன ஜயரத்ன அவர்களினால் கிழக்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்து.

அதன் பின் வருகை தந்தவர்கள், கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களை சந்தித்து உரையாடினார்கள். இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. மேலும் கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து வருகைதந்த குழுவினருடன் பாதுகாப்பு மற்றும் கல்வி பற்றி விவாதிக்கப்பட்டன.

குறித்த குழுவினர் வங்காளம், இந்தியா, நைஜீரியா, தன்சானியா ஆகிய நாடுகளின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் என்று குறிப்பிடத்தக்கது. மேலும் இன் நிகழ்வுக்காக இலங்கையின் வங்காளம் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கொமடோர் சய்ட் மக்சுமல் ஹகிம் அவர்களும் கழந்துகொன்டார்.