வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரால் குடிநீர் விநியோகம்
 

வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளையாகங்களுக்கு கீழுள்ள பிரதேசங்களில் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர். இதன்பிரகாரம் ஏற்கனவே 1,23,000 லிட்டருக்கும் அதிகமான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடற்படையினரின் இச்சமூக நலன்புரிச் சேவை முன்னெடுப்புகளின் மூலம் அநுராதபுர மாவட்டத்தில் அனுராதபுரம் மற்றும் மடவச்சிய பிரதேசங்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பகுதி, காரடன்குளியா, மொல்லிகுலாமா, மரிச்சிகட்டி மற்றும் பழங்குளி பிரதேசங்கள் உள்ளிட்ட பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் உட்பட கடற்படைகளின் சமூக நலத்திட்டமானது பயனாளிகளுக்கு நன்மை அளித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்துறை மற்றும் வேலிணி தெற்கு, திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேசத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மரைத்தம்பேட்டு, வவுனியா மாவட்டத்தில் உளுக்க்குமா மற்றும் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் ஆகிய பகுதிகளிலுள்ள 6000 க்கும் அதிகமான பாடசாலை சிறுவர்கள் இச்சேவையின் மூலம் பயன் பெற்றுள்ளனர்.