ரியர் அட்மிரல் ஹேமசந்திர குலரத்ன அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
இலங்கை கடற்படையின் இயக்குனர் பல்மருத்துவ சேவைகளாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் ஹேமசந்திர குலரத்ன அவர்கள் இன்றுடன் (அக்டோபர் 10) தமது 27 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
அவரது 60 வது பிறந்த நாள் இன்று ஈடுபட்டுள்ளதுடன் கடற்படைத் தலைமை அலுவலர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் உட்பட இயக்குநர்கள் வாரியம் குறித்த சிரேஷ்ட அதிகாரிக்கு தங்கலுடைய வாழத்துக்கள் தெரிவித்தனர். அதன்பின் அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின் சம்பிரதாய முறைப்படி வாகன அணிவக்குப்பொன்றில் ஓய்வு பெரும் சிரேஷ்ட அதிகாரியை மற்ற அதிகாரிகளால் தலைமையகத்தின் நுழைவாய் வரை அழைத்துச் செல்லப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டனர். அவ்வேளையில் பாதையின் இரு மருங்கிலும் கடற்படை வீரர்கள் கூடி மரியாதை செலுத்தினர்.
1991 ம் ஆண்டில் நேரடி ஆட்சேர்ப்பின் அதிகாரியாக கடற்படையில் இனைந்த ரியர் அட்மிரல் ஹேமசந்திர குலரத்ன அவர்கள் தன்னுடைய சேவை காலத்தின் கட்டளை பல்மருத்துவ அதிகாரி (கிழக்கு) கட்டளை பல்மருத்துவ அதிகாரி (மேற்கு) மற்றும் துனை இயக்குனர் பல்மருத்துவ சேவைகள் ஆகிய பல்வேறு தூரைகளின் கடற்படை நலனுக்காக பணியாற்றினார்.















