கடற்படையின் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன
 

கடந்த சில வாரங்களாக நிலவிய கடும் மழைகாரணமாக நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டன. இதேவேளை, தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிலைமைகளுக்கு உதவும் வகையில் கடற்படை நிவாரணக் குழுக்கள் தொடர்ந்தும் செயற்பட்டுவருகின்றனர்.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, வளல்லவிடிய, மற்றும் புலத்சிங்கள பகுதிகளிலும், காலி மாவட்டத்தின் நெலுவ, நாகொட, தவலம, ஹினிதும, அவிதவ மற்றும் வாக்வெள்ள பகுதிகளிலும், மாத்தறை மாவட்டத்தின் கடுபொத்த மற்றும் அகுரஸ்ஸ பகுதிகளிலும், கொழும்பு மாவட்டத்தின் வத்தளை பிரதேசத்திலும் இலங்கை கடற்படையின் 2 அவசர மீட்பு படகுகள் மற்றும் 11 சிறிய ரக படகுகளுடன் 14 நிவாரண குழுக்கள் செயற்பட்டுவருகின்றனர்.

மேலும், கடற்படை நிவாரண குழுக்களின் துரித நடவடிக்கையினால் தாழ்நிலப் பகுதிகளில் ஏற்பட இருந்த வெள்ளப்பெருக்கு அனர்த்தங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தென் மாகாணத்தின் காலியிலுள்ள அவிதாவ பாலத்தில் அடைத்துள்ள குப்பை கூளங்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டுள்ளதுடன், அப்பகுதியில் ஏற்பட இருந்த வெள்ள அனர்த்தங்களையும் தடுத்துள்ளனர்.