சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 29 பேர் கடற்படையினரினால் கைது
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 29 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்விரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட காரனத்தினால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த ஆக்டோபர் 14 ஆம் திகதி உப்புரல் மற்றும் கல்லடி பகுதியில் வைத்து சட்விரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து 04 டிங்கி படகுகள் 03 சட்டவிரொதமான வலைகள் மற்றும் பிடிக்கப்பட்ட 400 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மீனகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெருகல் மீன்பிடி உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த ஆக்டோபர் 16 ஆம் திகதி பூனாடி பகுதியில் வைத்து சட்விரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து 03 டிங்கி படகுகள் ஒரு சட்டவிரொதமான வலை மற்றும் பிடிக்கப்பட்ட 750 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மீனகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெருகல் மீன்பிடி உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த ஆக்டோபர் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கிழக்கு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 41 சட்விரோதமான வழைகள் கன்டுபிடிக்கப்பட்டது. குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்கலப்ப மீன்பிடி உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த ஆக்டோபர் 19 ஆம் திகதி ரவுன்ட் தீவுக்கு 1.1 கடல் மைல்கள் தூரத்தில் வைத்து சட்விரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து ஒரு டிங்கி படகு மற்றும் 02 சட்டவிரொதமான வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மீனகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மீன்பிடி உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் வடமத்திய கடற்படை கட்டளையின் படகுக்கு இனைக்கப்பட்ட வீர்ர்களினால் கடந்த ஆக்டோபர் 20 ஆம் திகதி மேற்கொன்டுள்ள ரோந்து பணியின் போது பேசாலேயில் இருந்து 03 கடல் மைல்கள் தூரத்தில் கடலில் மிதந்துகொன்டு இருந்த சந்தேகமான 12 பொதிகள் கன்டுபிடிக்கப்பட்டது. குறித்த பொதிகளில் இருந்து 748.04 கிலோகிராம் பீடி இலைகள் கைது செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குறித்த பீடி இலைகள் யாழ்ப்பாணம் சுங்க இலாகாவுக்கு ஒப்படைக்கப்பட்டது.