கடற்படை யுத்த வீரர்களின் குடும்பங்களுக்கு புதிய இரன்டு வீடுகள் அன்பளிப்பு
 

பாதுகாப்பு அமைச்சினுடைய ‘’நமக்காக நாம்” வீடமைப்புத் திட்டம் மற்றும் “வீர செபல பவுண்டேசன்” ஆகிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் அண்மையில் இரண்டு கடற்படை யுத்த வீரர்கள் குடும்பத்தினருக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம், கடமையில் இருக்கும்போது மரணமடைந்த இலங்கை கடற்படை வீரர் கேஏசீ குமாரவின் குடும்பத்தினருக்கு, கலந்பிந்துனுவெவ உபுல்தெனியவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு அவரது மனைவியிடம் வழங்கிவைக்கப்பட்டது. லீடிங் சுழியோடியான கேஏசீ குமார 2017ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 07ஆம் திகதி மஹியங்கனை நாகதீப்ப குளத்தில் சுத்திகரிப்பு நடவடிக்கையின் சுழியோடும் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது தனது உயிரை தியாகம் செய்தார்.

இரத்தினபுரி கொலன பமுனுவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட வீடு அங்கவீனமுற்ற கடற்படை வீரர் ஏபில் சீமேன் ஆர்ஜிகே விக்ரமசிங்கவிற்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இக்கடற்படை வீரர் 1999ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின்போது காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விருவீடுகளும் அண்மையில் (ஒக்டோபர், 25) இடம்பெற்ற நிகழ்வின்போது பயனாளிகள் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டன.

கலந்பிந்துனுவெவ உபுல்தெனியவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டிற்கு ‘’நமக்காக நாம்” திட்டத்தினால் சுமார் 750,000.00 ரூபாவும் நிதியும் மற்றும் இலங்கை கடற்படை நலன்புரி திட்டத்தினால் சுமார் 1,089,464.00 ரூபாவும் நிதியும் வழங்கப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி கொலன பமுனுவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டிற்கு “வீர செபல பவுண்டேசன்” சுமார் 1,200,000.00 ரூபாவும் நிதியும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் கடற்படையின் நிபுணத்துவம் மற்றும் மனிதவளம் பயன்படுத்தி இவ்விருவீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

The new house constructed at Pamunuwatta in Kolonna

The new house constructed at Upuldeniya in Galenbindunuwewa