புருண்டி குடியரசின் துணை ஜனாதிபதி உட்பட பிரதிநிதிகள் வெலிசறை கடற்படை படகு தயாரிக்கும் நியைத்தை பார்வைட்டனர்
 

உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொன்டு இலங்கைக்கு வருகைதந்த புருண்டி குடியரசின் துணை ஜனாதிபதி அதிமேதகு கெஸ்டின் சின்டிம்வோ அவர்கள் உட்பட பிரதிநிதிகள் நேற்று (அக்டோபர் 28) கடற்படை படகு தயாரிக்கும் நியைத்தை பார்வையிடுவதுக்காக வெலிசறை கடற்படை முகாமுக்கு வந்துள்ளனர். அங்கு மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பணிப்பாளர் நாயகம் பொறியியல் ரியர் அட்மிரல் ரவிந்திர ரனசிங்க ஆகியோரினால் அவர்களை வரவேற்கப்பட்டது.

அதன் பின் துணை ஜனாதிபதி அதிமேதகு கெஸ்டின் சின்டிம்வோ அவர்கள் உட்பட பிரதிநிதிகள் கடற்படை படகு தயாரிக்கும் நியைத்தில் கன்கானிப்பு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர். அங்கு கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட செட்ரிக் படகுகள் (Cedric craft) மற்றும் வேவ் ரய்டர் வகையில் படகுகள் (Wave Rider craft) குறிப்பாக கவனித்தார். புருண்டி குடியரசின் உள் நீர்வழிகளில் போக்குவரத்து நடவடிக்கைகாக குறித்த படகுகள் எதிர்காலத்தில் வாங்க அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன். இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.