கடற்படை சிறப்பு படகு படை தனது 25 ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

மத சடங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து 1993 நவம்பர் 09 ஆம் திகதி தொடங்கிய இலங்கை கடற்படை சிறப்பு படகு படை தனது 25 ஆண்டு நிறைவை திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தில் கடந்த நவம்பர் 09 ஆம் திகதி கொண்டாடியது. சிறப்பு படகு படை நிறுவனர், பாதுகாப்பு படைகளின் தற்போதைய தளபதி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்கள் குறித்த விழாவின் பிரதம அதிதியாக கழந்துகொன்டார். மேலும் சிறப்பு படகு படையின் ஓய்வு பெற்ற நபர்கள், இப் படையின் கடற்படையினரகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்களும் இன் நிகழ்வுக்காக கழந்துகொன்டனர்.

அதன் பிரகாரமாக கடந்த நவம்பர் 09 ஆம் திகதி அனைத்து போர் வீர்ர்களுக்கும் அசிர்வாதம் அளித்து இரவு தர்ம விரிவுரையும் அடுத்த நாள் காலை மதிப்பிற்குரிய துறவிகள் மற்றும் 25 பேருக்கு தானம் மற்றும் பிரிகர வழங்கப்பட்டது. அதன்பின் தாயகத்தைப் பாதுகாப்பதற்காக தனது உயிரை தியாகம் செய்த சிறப்பு படகு படையின் வீர்ர்களை நினைவைத்தல் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பாராட்டுவதுக்காக சிறப்பு விழாவொன்றும் ஏற்பாடுசெய்யப்பட்டது. அவர்களால் நாட்டிற்கு சிறப்புப் படகு படை மூலம் செய்யப்பட்ட தியாகங்களை பாராட்டுவதுக்காக படையின் ஓய்வு பெற்ற நபர்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

மேலும் சிறப்பு படகு படை சம நிறுவனரான காலஞ்சென்ற கொமான்டர் செட்ரிக் மார்டென்ஸ்டயின் அவர்களின் அன்பான மனைவி, திரு டிர்கி மார்டென்ஸ்டெயின் அவர்களுக்கு மற்றும் தாயகத்தைப் பாதுகாப்பதற்காக சிறப்பு பணியாற்றி போர் வீர்ர் ஒருவர் பெறும் மிக உயர்ந்த பதக்கமான வீர விபூஷன பதக்கம் பெற்ற பிரதான சிறிய அதிகாரி கே.ஜி ஷாந்த வீர்ருடைய அன்பான மனைவி ருவனி திஸாநாயக்க அவர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதன் பின் தாயகத்தைப் பாதுகாப்பதற்காக தனது உயிரை தியாகம் செய்த சிறப்பு படகு படையின் வீர்ர்கள் நினைவு செய்தல் 25 ஆண்டு நிறைவுக்கு இனையாக வீரர்கள் நினைவுச்சின்னம் அருகில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் தாயகத்தைப் பாதுகாப்பதற்காக தனது உயிரை தியாகம் செய்த வீர்ர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.

இன் நிகவுக்காக கடற்படையின் தலைமை தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா, கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, கடற்படை,காலாட்படைப் மற்றும் கடற்படை மரைன் பணிப்பாளர் ரியர் அட்மிரல் உதேனி சேரசிங்க, கொடி அதிகாரி கடற்படை கொடி கட்டளை ரியர் அட்மிரல் ஆனந்த குருகே, கடற்படை பணிப்பாளர் கடற்படை திட்டங்கள் ரியர் அடமிரல் அஜித் சமரசிங்க, கடற்படை செயல்பாடுகளுக்கான இயக்குனர் கொமடோர் சந்ஜிவ டயஸ் அவர்கள் உட்பட கடற்படைத் தலைமையகத்தில் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.