இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கால்பந்து போட்டித்தொடர் -2018
 

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கால்பந்து போட்டித்தொடர் கடந்த நவம்பர் 12 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் “நிபுன மைதானத்தில் இடம்பெற்றது இப் போட்டித் தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளில் இருந்து பல பேர் கழந்துகொன்டனர். இக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப் போட்டி கடந்த நவம்பர் 17 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் தென் கடற்படை கட்டளை இடையில் இடம்பெற்றதுடன் சாம்பியன்ஷிப் கிழக்கு கடற்படை கட்டளை வென்றுள்ளது.

சிறந்த விழையாட்டு வீரராக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர் எச்.எல்.எச்.சி அனுருத்த தெரிவுசெய்யப்பட்டார். ஆண்டின் வளர்ந்துவரும் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது கேடட் அதிகாரி பி.எஸ்.எல்.எம் ஷின்ஜோ பெற்றுள்ளார். பழைய மற்றும் அனுபவம் வாய்ந்த கால்பந்து வீரருக்கான விருது எச்.டி அலஹகோன் பெற்றுள்ளதுடன் சிறந்த பந்து தடுப்பு வீரராக வட மத்திய கடற்படை கட்டளையின் சக்தி வீர்ர் எச்,ஆர்,டீ,எஸ் பிரசாத் தெரிவுசெய்யப்பட்டார்.

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர, தென் கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் ரன்ஜித் பிரேமரத்ன ஆகியோர் உட்பட தென் கடற்படை கட்டளையின் மூத்த கடற்படை அதிகாரிகள் மற்றும் பல விழயாட்டு ரசிகர்கள் கழந்துகொன்டனர்.