கடற்படையினரால் நிறுவப்பட்ட 04 ங்கு குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு
 

இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டன. இதன்பிரகாரம் சாலியபுர நகரின் ஹதரஸ்வல கனிஷ்ட பாடசாலை, அனுராதபுர மாவட்டத்தில் அனுராதபுர போதனா வைத்தியசாலை மற்றும் மிரிஸவெடிய விகாரை உட்பட கட்டுகெளியாவ பிரதேசத்தின் தம்மா பரமி அரண்ய செனசணய ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட நான்கு புதிய குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வெவ்வேறு நிகழ்வுகளின் போது கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களால் சனிக்கிழமையன்று (நவம்பர், 17) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் சமூக நலத்திட்டத்தின்கீழ் இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான பிரிவினால் சிறு நீரக நோய் பரவளாக காணப்படும் பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு தூய குடிநீரினை பெற்றுக்கொடுக்கும் வகையில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுவருகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தூர நோக்கு சிந்தனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளது.

இலங்கை கடற்படையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இச்சமூக நலன்புரித்திட்டத்தின்கீழ் இப்பிரதேச மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் தூய குடிநீரினை பெற்றுக்கொள்வார்கள்.


Installation of Reverse Osmosis plant at Hatharaswala Junior School in Saliyapura


Installation of Reverse Osmosis plant at Teaching Hospital Anuradhapura


Installation of Reverse Osmosis plant at Dhamma Parami Aranya Senāsanaya in Katukeliyawa


‍Installation of Reverse Osmosis plant at Temple premises of Mirisawetiya in Anuradhapura