சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரினால் கைது
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமான மீன்பிடி மற்றும் சதுப்புநில சூழல் அழித்தல் ஆகிய காரனங்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரமாக வடமேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த நவம்பர் 11 ஆம் திகதி சிலாவதுர பகுதியில் வைத்து இரவு மீன்பிடி அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து 06 டிங்கி படகுகள் மற்றும் பிடிக்கப்பட்ட 2579 கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மீனகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் துனை மீன்பிடி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடமத்திய கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த நவம்பர் 13 ஆம் திகதி சவுத்பார் பகுதியில் வைத்து இரவு மீன்பிடி அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து 02 டிங்கி படகுகள் மற்றும் பிடிக்கப்பட்ட 243 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மீனகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் துனை மீன்பிடி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி கடந்த நவம்பர் 14 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் வடக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான போலீஸ் அலுவலகத்தின் அதிகாரிகள் இனைந்து குருனகர் கப்பல் துறை அருகில் மீன்பிடி வலையில் மறைக்கப்பட்ட உயர் வெடி பொருற்கள் (TNT / C4) 02 கிலோகிராம் 196 கிராம் கன்டுபிடித்தனர். குறித்த உயர் வெடி பொருற்கள் பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்பானம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடமத்திய கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த நவம்பர் 14 ஆம் திகதி அச்சானா கடற்கரை பகுதியில் வைத்து சதுப்புநில சூழல் அழித்துகொன்டு இருந்த ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவரிடமிருந்து கிளைகள் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கத்தி மற்றும் டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர், பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவதுர வனசீவராசிய உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த நவம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு பகுதியில் வைத்து சட்விரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து 04 படகுகள், 10 சட்டவிரொதமான வலைகள் மற்றும் பிடிக்கப்பட்ட 30 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மீனகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு துனை மீன்பிடி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.