கடற்படை பேச்சுப் போட்டித்தொடர் நவம்பர் 30 ஆம் திகதி கொழும்பில்
 

கடற்படை பேச்சுப் போட்டித்தொடர் வரும் 2018 நவம்பர் 30 ஆம் திகதி கொழும்பு இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் இடம்பெற உள்ளது. இப் போட்டித்தொடரில் அரையிறுதிப் போட்டி கடந்த நவம்பர் 16 ஆம் திகதி அட்மிரல் சோமதிலக திஸானாயக்க ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது. அங்கு பத்து பேச்சாளர்கள் இறுதி பேச்சிப் போட்டிக்காக தகுதி பெற்றனர்.

கடற்படை அதிகாரிகளின் பேச்சு திறன் வளர்ச்சியின் அடிப்படையில் இலங்கை கடற்படையின் கடற்படை மற்றும் ஆய்வு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேச்சுப் போட்டித்தொடர் 2016 ஆண்டில்தொடங்கியது. மூன்றாவது முறையாக நடைபெறுகின்ற இப் போட்டித்தொடர் மூத்த மற்றும் இளநிலை அதிகாரிகளாக இரண்டு பிரிவுகளில் கீழ் நடைபெறும், இப் போட்டித்தொடரில் வெற்றியாளர்களின் ஊக்கத்திற்காக பரிசுகள் மற்றும் வெகுமதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப் போட்டித்தொடரில் பிரதான நடுவராக கொமடோர் அனுர தனபால அவர்களும் துனை நடுவர்களாக கேப்டன் பிரசாத் காரியப்பெரும, கேப்டன் சமிந்த ரனவீர மற்றும் லெப்டினன்ட் மஹிந்த பியரத்ன ஆகியோர் நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்கள்.

மேலும் இருதி போட்டி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவருடைய தளைமையில் நடத்தப்படவுள்ளது. இப் போட்டித்தொடர் பார்வையிட அனைத்து கடற்படை கட்டளைகளில் இருந்து மூத்த மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் பங்கேற்க உள்ளனர்.