புதிதாக கட்டப்பட்ட மிஹிந்தலை கடற்படை விடுதி திரந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் கடந்த டிசம்பர் 02 மற்றும் 03 திகதிகளில் வட மத்திய கடற்படை கட்டளைக்கு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார். அங்கு கடற்படைத் தளபதியவர்களை  வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் முதித கமகே அவர்களினால் வறவேற்கப்பட்டது.

அதன் பிரகாரமாக கடற்படையினருக்காக மிஹிநடதலை பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மிஹிந்தலை கடற்படை விடுதி கடற்படை தளபதியவர்களினால் கடந்த டிசம்பர் 02ஆம் திகதி திரந்து வைக்கப்பட்டது. இன் நிகழ்வின் அடையாளமாக குறித்த வளாகத்தில் மாங்கன்று ஒன்றும் கடற்படை தளபதியவர்களினால் நடவு செய்யப்பட்டது. குறித்த விடுதி இலங்கை கடற்படை பௌத்த சங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கை கடற்படையினறால் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அதே தினம் இலங்கை கடற்படையின் பயிற்சி நிருவனமான இலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷா நிருவனத்தின் கற்கை கட்டிடமும் கடற்படை தளபதியவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வுகலுக்காக கடற்படை சேவா வநிதா பிரிவின் தளபதி சந்தியா ரணசிங்க கடற்படை பணியாளர்களின் தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள், வட மத்திய கடற்படை கட்டளையின் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கலந்து கொண்டனர்.


Declare opening of Mihintale Naval Rest


Declare opening of academic building at Sri Lanka Naval Ship Shiksha