அமெரிக்க கடற்படைக் கப்பல் ரூஷ்மோர் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

‘ரூஷ்மோர்’ எனும் அமெரிக்க கடற்படைக்கப்பல் இன்று (டிசம்பர், 21 ) கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்தது. வருகை தந்த குறித்த இக்கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

சுமார் 18000 தொன்கள் எடையுடைய இக் கப்பல் 185 மீட்டார் நீளம் கொண்டதாகும். இக் கப்பலில் கட்டளை அதிகாரியாக கொமான்டர் ஆர்.சி ட்ரன் அவர்கள் பணியாற்றிகிறார். ரூஷ்மோர் கப்பல் இலங்கையில் தரித்திருக்கும் வேளையில் இக்கப்பலிலுள்ள சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல உள்ளனர்.

அத்துடன், 06 தினக் கொன்ட நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொன்டு வந்துள்ள இக்கப்பல் டிசம்பர் 26 ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்பட உள்ளது.