23 வது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் பியல் த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்
 

அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களினால் இன்று முதல் (ஜனவரி 01) செயற்படும் வண்ணம் இலங்கை கடற்படையின் 23 வது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்பிரகாரம், அவர் தனது நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியிடம் நேற்று (டிசம்பர் 31) பெற்றுக்கொண்டார்.

வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் அம்பலன்கொட தர்மாஷோக கல்லூரியில் கல்விகற்றார். 1984 ஆண்டில் 12 வது ஆட்சேர்ப்பில் கெடட் அதிகாரியாக நிர்வாக பிரிவுக்கு இணைந்து தனது ஆரம்ப கட்ட பயிற்சிகளை பெற்றுக்கொண்டார். 1986 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இவர் சப்-லெப்டினன்ட் வாக அதிகாரமளிக்கப்பட்டுள்ளார். அதன் பின் படிப்படியாக பதவி உயர்வு பெற்று 2012 ஆம் ஆன்டில் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி இவர் ரியர் அட்மிரல் பதவிக்கி உயர்வு பெற்றுள்ளார். மேலும் இவர் ஆழ் கடலில் நிர் முழ்கி மற்றும் மீட்பு, கடல் குண்டுகள் அகற்றல் பற்றி நிபுணத்துவம் பாடநெறியினை மேற்கொன்டு அது மூலம் பெற்றுள்ள அனுபவம் மூலம் கடற்படைக்கு மற்றும் தனது தாய் நாட்டுக்கு புகழ்பெற்ற சேவை செய்த ஒரு முன்மாதிரி அதிகாரியாக குறிப்பிடத்தக்கது. மேலும் பேரழிவு மேலாண்மை பற்றி அனுபவம் உள்ள இவர் நாட்டில் பேரழிவுகள் ஏற்பட்டுள்ள போது அவரது பங்களிப்பை எப்போதும் வழங்கயுள்ளார்.

ஒரு கடற்படை அதிகாரியாக தன்னுடைய தாய்நாட்டுக்கு செய்த உன்னத சேவைக்கு வீர விபூஷன பதக்கம் இருமுறை பெற்றுள்ள இவர் மேலும் ரன விக்கிரம பதக்கம், ரனஷுர பதக்கம், விஷிச்ட சேவா விபூஷன பதக்கம் மற்றும் உத்தம சேவா பதக்கம் உட்பட பல பதக்கங்களும் பெற்றுள்ளார். மேலும் மனித வள மேலாண்மை, வணிக மேலாண்மை, போர் மூலோபாயம் மற்றும் பாதுகாப்பு பட்டமும் பெற்றுள்ள இவர் சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டமும் பெற்றுள்ளார். அத்துடன் சிறந்த விழையாட்டு வீரரான இவர் அவரது பதவிக்காலத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் கடற்படையின் சிறந்த விழையாட்டு வீரராக விருதுகள் பெற்றுள்ளார். மேலும் வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இலங்கை தேசிய கூடைப்பந்து அணி பிரதிநிதித்து பல சந்தர்ப்பங்களில் தென் ஆசிய மற்றும் ஆசிய கூடைப்பந்து போட்டிகளில் கழந்துகொன்டார்.

கடற்படைத் தளபதியாக நியமிக்கபட முன் கடற்படை தலைமை பணியாளராக பணியாற்றின இவர் அதுக்கு முன் கடற்படை பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள்,கொடி அதிகாரி கடற்படை கொடி கட்டளை, கிழக்கு, தென், வடமேற்கு மற்றும் வடக்கு ஆகிய கடற்படை கட்டளைகளில் தளபதியாகவும், பல கப்பல்களில், படகுகளில் மற்றும் நிருவனங்களில் கட்டளை அதிகாரி உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்குறிப்பாக, கடற்படை சிறப்பு படகு படைக்கும் நிர்முழ்கி பிரிவுக்கும் பல சந்தர்ப்பங்களில் கட்டளை வழங்கியுள்ளார்.