இந்திய கடற்படை கப்பல் ஜமுனா காலி துறைமுகத்துக்கு வருகை
 

இலங்கை கடலில் நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த 20 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு கப்பலான ஜமுனா கொழும்பிலிருந்து காலி வரையிலான கடற்பரப்பை நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொன்டு நேற்று (ஜனவரி 04) காலி துறைமுகத்தை வந்தடைந்தது. மேற்படி கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றுள்ளனர்.

அதன் பின் ஜமுனா கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் எச்.ஏ ஹார்டஸ் அவர்கள் தெக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து தெக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்களை சந்திதித்தார். இச்சந்திப்பின் போது அவர்களிடையே சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. அத்துடன் இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டடன.

இன் நிகழ்வுக்காக தெக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் ரன்ஜித் பிரேமரத்ன அவர்கள் மற்றும் இலங்கையின் இந்திய உயர் ஆணையத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் கேப்டன் அஷோக் ராஓ அவரும் கழந்துகொன்டுள்ளார்