இலங்கையின் சீன பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் இராணுவ, விமான மற்றும் கடற்படை விவகாரங்கள் பற்றிய சீனா பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கர்னல் ஷு ஜியேன்வெய் அவர்கள் இன்று (ஜனவரி 05) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

சீனா பாதுகாப்பு ஆலோசகர் முதலில் புதிய கடற்படைத் தளபதியவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தர். மேலும் இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன