சமச்சீரற்ற போர் உத்திகள் பயிற்ச்சி 2019 திருகோணமலையில் தொடங்கியது
 

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படையனி மூலம் ஏற்பாடுசெய்யப்படுகின்ற சமச்சீரற்ற போர் உத்திகள் பயிற்ச்சி (Asymmetric Warfare Course) நேற்று (ஜனவரி 07) திருகோணமலை கடற்படை சிறப்பு படகு படையணி தலைமையகத்தில் தொடங்கியது. இப் பயிற்சியின் தொடக்க விழாவிற்கு சிறப்பு படகு படையணி தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கொமான்டர் துசித தமின்த அவர்கள் கழந்துகொன்டார்.

மேலும் குறித்த பயிற்சி 12 வாரங்களாக இடம்பெற உள்ளதுடன் குறித்த பயிற்சியின் போது சமச்சீரற்ற போர் உத்திகள் பற்றி இலங்கை கடற்படையின் அதிகபட்ச அறிவு வழங்க எதிர்பார்க்கப்படுகின்றதுடன் பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மாலைதீவு, பாகிஸ்தான், நெதர்லாந்து மற்றும் இலங்கை இராணுவப் பணியாளர்கள் உட்பட முப்பத்தி இரண்டு (32) பயிச்சியாளர்கள் கழந்துகொள்வார்கள்.மேலும் குறித்த பயிற்ச்சி ஏப்ரல் 02 ஆம் திகதி நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.