தன்னார்வ கடற்படையின் வருடாந்த பயிற்ச்சி முகாம் வெலிசரயில் தொடங்கியது
 

இலங்கை தன்னார்வ கடற்படையின் 67 வது ஆண்டுநிறைவுக்கு இணையாக 2019 ஜனவரி 04 ஆம் திகதி வருடாந்த பயிற்ச்சி முகாம் ஒன்று வெலிசர இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் தொடங்கியது. இன் நிகழ்வின் பிரதம அதிதியாக மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி மற்றும் இலங்கை தன்னார்வ கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் கழந்துகொன்டார்.

குறித்த பயிற்ச்சி முகாமில் தொடக்க விரிவுரை மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி மற்றும் இலங்கை தன்னார்வ கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது. இன் நிகழ்வுக்காக தன்னார்வ கடற்படையின் கட்டளை அதிகாரி கேப்டன் டோனி பெரேரா அவர்கள் உட்பட தன்னார்வ கடற்படையின் பல அதிகாரிகள், மூத்த வீர்ர்கள் மற்றும் இளநிலை வீர்ர்கள் கழந்துகொன்டனர். குறித்த பயிற்ச்சி முகாமில் முதல் விரிவுரை “கடற்படையின் பணிகள் எனப் பெயரில் இயக்குனர் கடற்படை செயல்பாடுகள் கொமடோர் சன்ஜிவ டயஸ் அவர்கள் உரையாடினார். இந்த பயிற்ச்சி முகாம் ஜனவரி 19 ஆம் திகதி நிரைவடையும்.