தென் கடற்படை கட்டளையின் தளபதி தென் மாகாண ஆளுநருடன் சந்திப்பு
 

தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்கள் நேற்று (ஜனவரி 21) தெற்கு மாகாண ஆளுநர் கெளரவ கீர்த்தி தென்னகோன் அவர்களை தெற்கு மாகாணம் ஆளுநரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.

முதலில் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி அவர்கள் புதிய ஆளுநர் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதன் பின் கட்டளையின் தளபதி அவர்களினால் இப் பகுதி பாதுகாப்புக்காக கடற்படையின் பங்களிப்பை பற்றி தெற்கு மாகாண ஆளுநர் அவர்களை தெரிவுபடுத்தப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.