கடற்படை தளபதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் கடந்த ஜனவரி 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். அங்கு கடற்படை தளபதி அவர்களை கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களினால் உற்சாகமாக வரவேற்கப்பட்டதுடன் கடற்படை விஷேட மரியாதை அணிவகுப்பொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

கடற்படை தளபதியவர்கள் முதலில் இலங்கை கடற்படை கப்பல் கோடாபய, இலங்கை கடற்படை கப்பல் ரன்வெலி, இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா ஆகிய நிருவனங்களுக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் குறித்த நிருவனங்களில் அதிகாரிகள் மற்றும் வீர்ர்களுடன் உறையாடினார். அதன் பின் கடற்படைத் தளபதியவர்கள் கிழக்கு கடற்படை கட்டளையின் அனைத்து அதிகாரிகள் மற்றும் வீர்ர்களுடன் உறையாடினார். அங்கே, அவர்களுக்கு நியமிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்காக பல முக்கிய காரனங்கள் உட்பட பல தேவையான வழிமுறைகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

அதன் பின் திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படை நீர்முழ்கி பிரிவுக்கு கண்கானிப்பு விஜயமொன்று மேற்கொன்டு குறித்த பிரிவின் கடற்படையிருடன் உறையாடினார். மேலும் கடற்படைத் தளபதியவர்களின் வருகையை குறித்து கட்டளை நீர் முழ்கி அதிகாரி (கிழக்கு) லெப்டினன்ட் கமாண்டர் நிஷாந்த பாலசூரிய அவர்களினால் நினைவுச்சின்னமொன்றும் வழங்கப்பட்டது.

அதன் பின் கடற்படை தளபதியவர்கள் கிழக்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட துரித தாக்குதல் படகுகளுக்கும் கண்கானிப்பு விஜயமொன்று மேற்கொன்டு கடற்படையிருடன் உறையாடினார். கிழக்கு கடற்படை கட்டளையில் கடற்படையினரினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கும் அவர் சென்று குறித்த திட்டங்கள் உடனடியாக நிறைவுசெய்வதுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதன் படி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற பின் மேற்கொன்டுள்ள முதல் விஜயம் இதுவாகும்.


கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் இடம்பெற்ற கடற்படை விஷேட மரியாதை அணிவகுப்பு


இலங்கை கடற்படை கப்பல் கோடாபய நிருவனத்தில் மேற்கொன்டுள்ள கண்கானிப்பு விஜயம்


இலங்கை கடற்படை கப்பல் ரன்வெலி நிருவனத்தில் மேற்கொன்டுள்ள கண்கானிப்பு விஜயம்


இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா நிருவனத்தில் மேற்கொன்டுள்ள கண்கானிப்பு விஜயம்


கடற்படைத் தளபதியவர்கள் கிழக்கு கடற்படை கட்டளையின் அனைத்து அதிகாரிகள் மற்றும் வீர்ர்களை உறையாடியதை


கடற்படை நீர்முழ்கி பிரிவில் (கிழக்கு) மேற்கொன்டுள்ள கண்கானிப்பு விஜயம்


துரித தாக்குதல் படகுகளில் மேற்கொன்டுள்ள கண்கானிப்பு விஜயம்


கிழக்கு கடற்படை கட்டளையில் திட்டங்களுக்கு மேற்கொன்டுள்ள கண்கானிப்பு விஜயம்