அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் மணல் கொண்டு சென்ற 04 பேர் கடற்படையினரினால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் மரைன் படையணி வீரர்கள் மற்றும் சர்தாபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று (ஜனவரி 25) கந்தல்காடு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மகாவலி ஆற்றில் மணல் கொண்டு சென்ற 04 பேர் கைது செய்துள்ளனர்.

அங்கு அவர்களிடமிருந்து 02 டிப்பர் வன்டிகள் 06 கியுப் மணல் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள், டிப்பர் வன்டிகள் மற்றும் மணல் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கின்னியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று (ஜனவரி 25) தினமும் கந்தலே தெஹிவத்த பகுதியில் சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற 06 பேரை கடற்படையினரினால் கைது செய்துசெய்யப்பட்டது.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தளபதியின் மற்றும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடய கருத்துப்படி மகாவலி ஆற்றில் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் ஊழல் கட்டுப்படுத்துவதுக்கு கடற்படை ஆதரவுடன் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதன் படி தற்போது கடற்படை தளபதியின் வழிகாட்டலின் கீழ் கடற்படை பல நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது.