17 கப்பல்கள் மற்றும் படகுகள் கொழும்பு கடற்படை பயிற்சில் - CONEX 2019 பங்கேற்பு
 

கொழும்பு கடற்படை பயிற்சி (Colombo Naval Exercise –CONEX 19) நேற்று (ஜனவரி 26) இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலயில் தொடங்கியது. இன்று (ஜனவரி 27) கொழும்பு கடலில் இலங்கை கடற்படை கப்பல் சிந்துரல, சாகர, சமுதுர, பிரதாப, சுரநிமில, மிஹிகத, ரத்னதீப இலங்கை கடலோர காவல்படையின் சுரக்ஷா மற்றும் சமூத்ராக்‌ஷா ஆகிய 09 கப்பல்களுடன் 08 துரித தாக்குதல் படகுகள் குறித்த பயிற்சியில் கழந்துகொன்டது

அதன் படி இன்றய தினம் கப்பல்கள் கையாளுதல், கடலில் இரவு படப்பிடிப்பு பயிற்சி, கடலில் நபர்கள் மற்றும் பொருட்களை பரிமாற்றம், கப்பல்கள் இழுத்தல், சமிக்ஞைகளை பரிமாற்ற முறைகள் ஆகிய பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் நாளை தினமும் இவ்வாரு பயிற்சிகள் இடம்பெற உள்ளது. மேலும் இதன் இறுதி பயிற்சி ஜனவரி 29 ஆம் திகதி நடைபெற உள்ளது.