இலங்கை கடற்படையினரினால் தயாரிக்கப்பட்ட இரண்டு படகுகள் சீஷேல்ஸ் அரசிடம் கையளிப்பு
 

வெலிசறை கடற்படை முகாமில் அமைந்துள்ள கடற்கரையோர காவல் படகுகளை தயாரிக்கும் தளத்தில் (Inshore Patrol Craft Construction Project) தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு படகுகள் சீஷேல் நாட்டுக்கு வழங்கும் நிகழ்வு இன்று (பெப்ரவரி 01) கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வின் பிரதம அதிதிகளாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் மற்றும் சீஷேல்ஸ்சின் உப ஜனாதிபதி வின்சன்ட் மெரின்டன் அவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதன் படி கடற்படையினரினால் தயாரிக்கப்பட்ட இரண்டு படகுகளையும் (02) அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சீஷேல்ஸ்சின் உப ஜனாதிபதி வின்சன்ட் மெரின்டன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. படகுகள் வழங்கும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வுக்கு சீஷேல் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சீஷேல்ஸ் கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம், கேணல் சைமன் டைன் கழந்துகொன்டதுடன் இலங்கை கடற்படை பிரதிநிதித்துவப்படுத்தி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் கழந்துகொன்டுள்ளார்.

மேலும் வெலிசறை கடற்படை முகாமில் அமைந்துள்ள கடற்கரையோர காவல் படகுகளை தயாரிக்கும் தளத்தில் சர்வதேச தரத்துக்கு ஏற்றவாறு இலங்கை கடற்படையின் தொழில்நூட்பத்தை பயன்படுத்தி மற்றும் கடற்படை பொறியியலாளர்களின் கண்காணிப்பின் கீழ் இந்த படகுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் படி 2016 ஆண்டில் கடற்படையினரினால் தயாரிக்கப்பட்டுள்ள பல படகுகள் நைஜீரிய அரசிடம் வழங்கப்பட்டது. மேலும் சீஷேல் அரசிடம் கையளிக்கப்பட்ட குறித்த கடற்படை படகுகள் தயாரிப்பு 2018 ஆண்டில் ஒக்டோபர் மாதம் தொடங்கப்பட்டதுடன் கடற்படை பொறியியலாளர்களின் கண்காணிப்பின் கீழ் இந்த படகுகள் மிக குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.

‍இன் நிகழ்வுக்காக இலங்கையின் சீஷேல்ஸ் உயர் ஆணையாளர் அதி மேதகு கொன்ரட் மெடெரிக், பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமை பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் ஜகத் ரனசிங்க, கடற்படை துனை தலைமை பணியாளர் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல ஆகியோர் உட்பட கடற்படையின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.