11 கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இருவர் கைது
 

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் இன்று (ஜனவரி 02) கல்பிடிய குடாவ கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் வழியால் கடத்திக்கொன்டுருந்த 11 கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இலங்கை நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் கல்பிட்டி, குடாவ பகுதியில் வசிக்கின்ற 33 மற்றும் 29 வயதானவர்களாக கண்டுபிடிக்கப்பட்டதுடன் தங்கம் கடத்த பயன்படுத்திய டிங்கி படகும் கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட குறித்த நபர்கள், தங்கம் மற்றும் டிங்கி படகு மேலதிக விசாரணைக்காக கொழும்பு, சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடற்படை அடிக்கடி மேற்கொள்கின்ற செயல்கள் காரணமாக கடந்த ஆண்டுகுள் மட்டுமே சட்டவிரோதமாக நாட்டுக்குழ் கொண்டு வர முயற்சித்த 62 கிலோகிராம் தங்கம் கைது செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கடல் எல்லையில் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாரான சட்டவிரோத நடவடிக்கைகளை ரத்து செய்ய இலங்கை கடற்படை முன்னணி வகித்து செயற்படுகின்றது.