71வது தேசியத் தின விழா
 

இலங்கையின் 71 ஆவது தேசிய தின நிகழ்வு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்றது. இதுக்காக கடற்படை பாரிய பங்களிப்பை வழங்கியது. இன் நிகழ்வில் விஷேட அதிதியாக மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஸ் அவர்கள் கலந்து கொண்டார்.

தேசியத் தின விழாவுக்காக கெளரவ மகா மகாசங்கத்தினர், அனைத்து மதகுருமார்கள், திரு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, தேசபந்தி கரு ஜயசூரிய, தலைமை நீதிபதி, நலிண் பெரேரா, வெளிவிவகார மற்றும் உள்ளூர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, அமைச்சர், கௌரவ வஜிர அபேவர்தன, மேல் மாகாண ஆளுநர், கௌரவ ஆசாத் எம்.சாலீ, மேற்கு மாகாண சபை முதலமைச்சர் திரு இசுரு தேவப்பிரிய, ஜனாதிபதியின் செயலாளர் திரு. உதய ரஞ்சித் செனவிரத்ன, பிரதமரின் செயலாளர் திரு. சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ, பாதுகாப்பு படைகளின் தலைமை பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன, இராணுவ தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, போலீஸ் மா அதிபர் புஜத் ஜெயசுந்தர அகியோர் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், இலங்கையின் அனைத்து பகுதிகளிலிருந்து பல மக்களும் கழந்துகொன்டனர்.

அதிமேதகு ஜனாதிபதியவர்களினால் தேசிய கொடிகளை ஏற்றி ‘மகுல் பெர’ நாத ஒலியுடன் 110 பாடசாலை மாணவர்களது பங்களிப்புடன் தேசிய கீதங்கள் மற்றும் மங்கள கீதங்கள் இசைத்து இலங்கையின் சுதந்திரம், தேசிய ஒருமைப்பாடு, இறைமை ஒற்றுமை என்பவற்றிற்காக தம் உயிர் நீத்த சகல தேசாபிமானிகளையும் நினைவு கூறுவதற்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். தேசிய தின விழாவில் இலங்கை கடற்படை பிரதிநிதித்துவப்படுத்தி கொமடோர் ஜயந்த கமகே முன்னிலையில் பயனிக்கும் வண்டியில் செல்கிரார் கொமடோர் சுதந்த பெரேரா கடற்படை அணிக்கு கட்டளை வழங்குகிறார்.

கடற்படை அணிவகுப்பு, முதல் படையணி, கடற்படையின் மிதக்கும் கட்டளை, சிறப்பு படகுப் படையணி, துரித நடவடிக்கை படகு படையணி, மரைன் படையணி, கடற்படை பெண்கள் படையணி ஆகிய 06 படையணி கழந்துகொன்டுள்ளது. இந்த தேசிய விழாவின் அணிவகுப்புக்கு நீல வெள்ளை மற்றும் இராணுவ சீருடை அணிந்த கடற்படையினர் 1033 பேர் கழந்துகொன்டதுடன் கடற்படை இசைக்குழுவின் இசையின் படி இவர்கள் பெறுமையுடன் அணிவகுப்பில் நடந்து சென்றனர். தேசத்துக்கு வழங்கின்ற சேவையை கௌரவிப்பதற்காக கடற்படை தலைமையகம், கிழக்கு, வடக்கு, வெளியீடு கட்டளை மற்றும் கடல்சார் கல்லூரிக்காக வழங்கப்பட்ட ஜனாதிபதி வர்ணணங்களை முன்னெடுத்த கடற்படை வீரர்கள் தங்களுடைய மரியாதையை வெளிப்படுத்தினார்.

இலங்கை கடற்படையின் அனைத்து பிரிவுகளும் பிரதிநிதித்துவப்படுத்தி கடற்படை தலைமையகத்தின் படையனி அணிவகுப்பில் முன்னோக்கி சென்றுள்ளதுடன் லெஃப்டினென்ட் கமாண்டர் அஜித் ஜயசேகர இதுக்காக கட்டளை வழங்கினார். இலங்கை பெருங்கடல் பகுதி பாதுகாப்பிற்கு அர்ப்பணிக்கும் கடற்படையின் வெளியீட்டு கட்டளையின் வீர்ர்களின் அணிவகுப்பிற்கு லெஃப்டினென்ட் கமாண்டர் ரொஷான் குலதுங்க கட்டளை வழங்கினார்.

கடலில் போன்று தரை மற்றும் வான் போர் விற்பன்னர்களை கொண்ட சிறப்பு படகுப் படையணிக்கு லெஃப்டினென்ட் கமாண்டர் சாமர லியனகே கட்டளை வழங்கினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது பாரிய பங்களிப்பினை வழங்கிய கடற்படை துரித நடவடிக்கை படகு படையணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீர்ர்களின் மரியாதை அணிவகுப்புக்கு லெஃப்டினென்ட் கமாண்டர் திமுது தேஷப்பிரிய கட்டளை வழங்கினார் “வலிமை மற்றும் துணிச்சலுடன் வெற்றிக்காக” எனப் கருப்பொருள் கொன்ட மரைன் படையணிக்கு லெஃப்டினென்ட் கமாண்டர் யாபா ஜயசிங்க கட்டளை வழங்கினார்.

லெஃப்டினென்ட் கமாண்டர் தெரங்கா கொடிசிங்க முன் கொண்டு கடற்படையின் மருத்துவம், சமிக்ஞைகளை, விநியோகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தன்னார்வ பிரிவுகளின் கடமைகளில் ஈடுபடும் கடற்படை பெண்கள் படையனி சென்றுள்ளது. இலங்கை கடற்படையின் பிரதான தொழில்நுட்ப ஆயுதங்கள் மற்றும் பாகங்களை காட்சிப்படுத்தும் வாகன மரியாதை அணிவகுப்பிற்கு கமான்டர் கெலும் பிரனாந்து கட்டளை வழங்கினார்.

கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி கமான்டர் கொமான்டர் தர்மசிரி ஹேரத் கடற்படை கொடியுடன் பரசூட் காட்சியிள் கலந்து கொன்டார். அவரையடுத்து சிறு அதிகாரி ஜி.சி.எம்.கே கீகியனகே மற்றும் சிறு அதிகாரி டப் ஏ சிரிவர்தன ஆகியோரும் பரசூட் காட்சியில் கலந்து கொன்டார்கள்.

இலங்கை கடற்படையின் ஆழ் கடல் கண்காணிப்பு கப்பலான சமுதுர முன்கொன்டு இலங்கை கடற்படை கப்பல் சாகர மற்றும் இலங்கை கடற்படைக்கு புதிதாக சேர்க்கப்பட்ட சிந்துரல கப்பல் அதன் பின் ஏவுகணை தாக்குதல் கப்பலான சுரனிமில, கடலோரக் காவல் படையின் சுரக்‌ஷா வேகத் தாக்குதல் ரோந்து கப்பல்களான பிரதாப, உதார, ரத்னதீப,ரனதீர மற்றும் மிஹிகத ஆகிய கப்பல்களும் இந்த அணிவகுப்புக்கு கலந்துக்கொன்டுள்ளது. இக் கப்பல்கள் மற்றும் படகுகள் பொருப்பான கட்டளை அதிகாரியாக கேப்டன் டேமியன் பிரனாந்து அவர்கள் நடவடிக்கை மேற்கொள்கிறார்.