(AMAN 2019) பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை கடற்படையின் சயுரல கப்பல் நாடு திரும்பியது.

பாகிஸ்தான் கடற்படையினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட பன்னாட்டு கடற்படை பயிற்சியான "அமன் 2019" இல் இலங்கை கடற்படையின் "சயுரள" கப்பல் உற்பட 44 நாடுகளின் கடற்படைகளின் கப்பல்கள் மற்றும் படகுகள் என்பன பங்கேற்றன. பாக்கிஸ்தான் கராச்சி நகரில் இம்மாதம் 08ம் திகதி முதல் 13ம் திகதி வரை இடம்பெற்ற ஐந்து நாட்களைக் கொண்ட இக்கூட்டுப்பயிற்சியில் இலங்கை கடற்படை சார்பில் "சயுரள" கப்பல் பங்கேற்றது. "அமன் " எனும் பன்னாட்டு கடற்படை பயிற்சியானது பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஊக்குவித்தல் என்பவற்றுடன் கடற்பிராந்தியத்தில் எதிர்கொள்ளும் தீவிரவாதம் மற்றும் குற்றங்களுக்கு எதிராக ஒன்றிணைந்த தீர்வினை செயல்படுத்தல் ஆகியவற்றை நோக்காக கொண்டு செயல்படுத்தப்படுகின்றது."சயுரள" கப்பலானது, கடல் வழி தேடல் மற்றும் மீட்பு பயிற்சிகள் மற்றும் மனிதாபிமான உதவி என்பவற்றுடன் பேரழிவு நிவாரண திட்டங்கள், சமச்சீரற்ற மற்றும் பாரம்பரிய அச்சுறுத்தல்கள் ஆகிவற்றுக்கு எதிரான பதில் தந்திரோபாயங்கள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்து பயிற்சிகளிலும் பங்கேற்றது.

இப்பன்னாட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்ற "சயுரள" கப்பல் எதிர்வரும் இருபத்தெட்டாம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.