சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (CISM) மராத்தான் போட்டி நிகழ்வு – 2019 கடற்படை ஏற்பாட்டின் வெற்றிகரமாக இடம்பெற்றது

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (Council International Military Sports) மராத்தான் போட்டி நிகழ்வு – 2019 இன்று (பெப்ரவரி 18) கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன, இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, விமானப்படை தளபதி, ஏயர் மார்ஷல் கபிலா ஜெயம்பதி ஆகியோர் உள்ளிட்ட சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். “விளையாட்னூடாக நட்பு” எனும் குறிக்கோளுக்கு அமைவாக இடம்பெற்ற இந்த மராத்தான் போட்டி கொழும்பு கலங்கரை விளக்கம் அருகில் தொடங்கி காலி வீதி வழியாக முன்னோக்கி சென்று கொழும்பு, காலி முக ஹோட்டல் முன் வட்டாரங்கத்தை சுற்றி திரும்ப கொழும்பு கலங்கரை விளக்கம் அருகில் நிறைவுற்றது. அதன் பின் இன் நிகழ்வில் கழந்துகொன்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், 133 அங்கத்துவ நாடுகளுக்கிடையில் நட்பு மற்றும் தோழமை ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் வருடாந்தம் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடுசெகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை 1996 ஆண்டில் உறுப்பினர் பதவியை பெற்றுள்ளது. இதேவேளை, உலகின் மிகப்பெரிய ஒரு பல்துறை அமைப்புகளில் ஒன்றாக சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.