இலங்கை கடற்படைக் கப்பல் 'சயுரள' அபுதாபியில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்துள்ளது

கடந்த பெப்ருவரி 17 ஆம் திகதி அபுதாபியில் தொடங்கிய சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டில் 2019 (International Defence Exhibition & Conference) பங்குபெற்ற சயுரல கப்பல் நேற்று (பெப்ருவரி 20) பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்துள்ளது.

அதன் படி அபுதாபி கடற்படை பிரிவின் துனை தளபதி கடற்படை பிரேகியர் ஜேனரல் அப்துல்லா அப்துல்லா அல் ஷெயிஹி அவர்கள் நேற்று இலங்கை கடற்படைக் கப்பல் சயுரலவின் கட்டளை அதிகாரி கேப்டன் இசிர காஸிவத்த அவர்களை சந்தித்துள்ளார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் இலங்கை தூதரகத்தின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நேற்று இலங்கை கடற்படைக் கப்பல் சயுரலவின் கவனிப்பு சுற்றுப்பயணமொன்று மேற்கொண்டுள்ளனர். அங்கு கப்பல் பற்றிய அறிவை அவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இந்த வாய்ப்பு அவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளித்தது.