இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் நலீன் நவரத்ன கடமையேற்பு

இலங்கை கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான சிந்துரல கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் நலீன் நவரத்ன அவர்கள் இன்று (பெப்ருவரி 21) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கேப்டன் உதய குமாரசிங்க அவர்களினால் கொழும்பு துறைமுக பகுதியில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக கொடி கட்டளையின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் ஆனந்த குருகே அவர்கள் கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.