திருகோணமலையில் மணல் அகழ்வுக்காக பொருத்தமான இடங்களை அடையாளம் காண கடற்படை ஆதரவு

2019 பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மகாவலி ஆற்றில் மணல் அகழ்வு நடவடிக்கைகள் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மூலம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பின் பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வு தொடர்பாக ஒரு முறையான ஆய்வு நடத்த புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது. மேலும் இதுக்காக இலங்கை கடற்படை அதிகாரிகளின் உதவியினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் படி நேற்று (பெப்ரவரி 20) திருகோணமலை மகாவலி ஆற்றின் மேற்கொன்டுள்ள களம் விசாரணை விஜயத்தின் போது அதிக எண்ணிக்கையிலான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இது மூலம் மணல் அகழ்வுக்காக பொருத்தமான இடங்களை அடையாளம் காணப்பட்டதுடன் தற்போது வழங்கப்பட்ட உரிமங்கள் பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் இந்தச் செயல்பாடுக்காக வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், இலங்கை பொலிஸ், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இணைந்த உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்.